விஜய்சேதுபதி படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகும் ஜனகராஜ்

ரஜினி, கமல் காலத்தில் நகைச்சுவை வேடங்களில் கலக்கியவர் ஜனகராஜ். அதுவும் ரஜினியுடன் இவா் நடித்த ராஜாதி ராஜா, அண்ணாமலை, பாண்டியன்,பாட்ஷா போன்ற படங்களின் காமெடியை நம்மால் இன்னும் மறக்க முடியாது. குறிப்பாக அண்ணாமலையில் உனக்கு பெண்களால் ஒரு ஆபத்து என்ற டயலாக்கும், நாசமா நீ போனியா என்ற டயலாக்கும் செம. இவருடைய பாடி லாங்க்வேஜ் இவரது கூடுதல் பலம்.

2000ம் ஆண்டுக்கு பின் இவர் திரைத்துறையை விட்டு விலகினார்.பின்னர் அமெரிக்காவில் உள்ள அவரது மகள் வீட்டில் செட்டில் ஆனார்.

இந்நிலையில் தற்போது சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறாா். அதுவும் நம்ம கலக்கல் காமெடி மன்னன் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளாா். விஜய்சேதுபதி, திாிஷா நடித்து வரும் 96 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருகிறாா்.

கிட்டத்தட்ட நீண்ட வருடங்களுக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுக்கும் ஜனகராஜ் இந்த படத்தில்  அவா் சம்பந்த பட்ட காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டன. இயக்குநா் சொல்லி கொடுத்ததை உன்னிப்பாக கவனித்து அதன் படி ஒரே ஸ்ர்ட்டில் நடித்து கொடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றாா் ஜனகராஜ். இதன் மூலம் அவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும் என்பது மட்டும் உண்மை.