1. கவனம்
இவர்கள் கவனிப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். இந்த கவனம், நீங்கள் சொல்வதை கவனமாக கேட்பதாகவும் இருக்கலாம் தங்களை சுற்றி நடப்பவற்றை புரிந்து கொள்ள முயற்சிப்பதாகவும் இருக்கலாம். விஷயங்களை உற்று நோக்கி பொருள் அறிவது இவர்களுக்கு கைவந்த கலை.

2. நினைவாற்றல்
படிப்பதும் ஒரு வகை தியான நிலையே. படிக்கும் பழக்கம் இவர்களை கவனிக்கவும் மனதை ஒருநிலைப் படுத்தவும் பழக்குவதால், நினைவாற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள். இது நம் பள்ளிகளில் பழகிய மனப்பாடம் செய்யும் நினைவாற்றல் அல்ல.

3. சிக்கல் தீர்க்கும் திறன்
விஷயங்களை மாற்று கோணத்தில் பார்ப்பதும் கவனிப்பதும் இவர்களுக்கு இயல்பாக வருபவை என்பதால் சிக்கல் சூழல்களில் மூழ்காமல் அதற்கு தீர்வு காண முயல்வார்கள். ‘அவுட் ஆஃப் பாக்ஸ் திங்கிங்’ இவர்கள் குணங்களில் ஒன்று.

4. ஒழுக்கம்
திட்டமிடுவதும் தனக்கென ஒரு வழிமுறை செயல்பாடுகளை உருவாக்கி கொண்டு செயல்படுவதும் இவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும். இந்த ஒழுக்கம், நல்ல பழக்கம் தீய பழக்கம் என்ற ஒழுக்கம் அல்ல (நன்மை தீமைகளில் இவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை). இந்த ஒழுக்கம் செயல்களை திட்டமிடுவது அதன் படி நடப்பது. இது தொடர்ந்து அதிகாலை எழுவதாகக் கூட இருக்கலாம்.

5. சிந்தனை
இவர்களின் சிந்தனை ஓட்டம் இவர்களை சுற்றி இருப்பவர்களைக் காட்டிலும் மாறுபட்டிருக்கும். பேசுவதை தவிற சிந்திப்பது இவர்களுக்கு பிடித்தமான செயலாக இருக்கும். பல நேரங்களில் அமைதியாக இருக்கும் இவர்கள் பேசினால் ஒன்று ஆச்சர்யபடுவீர்கள் இல்லை கோபப்படுவீர்கள், ஏனெனில் இவர்கள் சொல்லும் விஷயங்கள் ஆழ்ந்த கருத்துடன் இருக்கம் இல்லை பொது உலக வழிமுறைகளுக்கு மாறாக இருக்கும்.

இதை படித்தீர்களா?

இன்னைக்கு படிச்சீங்களா?