என் மனைவி பெற்ற குழந்தை என் ஜாடையில் இல்லை. அதனால் கொலை செய்தேன் என குழந்தையை துண்டு துண்டாக வெட்டிய தந்தை அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம்பட்டு அடுத்துள்ள கிராமத்தில் வசிப்பவர் கார்த்திகேயன்(30). இவர் பெட்ரோல் பங்க் வைத்துள்ளார். 4 வருடங்களுக்கு முன்பு இவர் ராஜேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணெயை குடித்த ஒன்றரை வயது குழந்தை பலி

நேற்று இரவு வீட்டில் கார்த்திகேயன், அவரின் தந்தை தனபால், ராஜேஸ்வரி மற்றும் குழந்தை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அரிவாளால் வெட்டும் சத்தம் கேட்டு ராஜேஸ்வரி எழுந்தார். அப்போது, கார்த்திகேயன் தனது குழந்தையை அரிவாளால் வெட்டிக்கொண்டிருந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி கூச்சலிட்டார். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர். துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் குழந்தை இறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் அவர்கள் வானாபுரம் காவல் நிலையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையும் படிங்க பாஸ்-  கருணாநிதியின் இறப்பு சான்றிதழில் எந்த மனைவியின் பெயர் இடம்பெற்றுள்ளது தெரியுமா?

முதலில், கார்த்திகேயனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ஆனல், தற்போது வேறு காரனம் தெரியவந்துள்ளது. கார்த்திகேயன் வாக்குமூலத்தில் “என் மனைவி மீது எனக்கு நிறைய சந்தேகம் இருந்தது. அதனால், இந்த குழந்தை எனக்கு பிறந்திருக்காது என நான் நம்பினேன். யாருக்கோ பிறந்த குழந்தை நாளை என்னை அப்பா எனக்கூறுவதை என்னால் ஏற்க முடியாது. எனவேதான், அந்த குழந்தையை கொலை செய்தேன்” என அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  கிரிக்கெட் வீரரை திருமணம் செய்தாரா நடிகை காயத்ரி? - வெளியான புகைப்படம்

மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தில் பிஞ்சுக்குழந்தையை துண்டு துண்டாக கார்த்திகேயன் வெட்டி கொலை செய்த விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.