தமிழகத்தில் ஜெ மறைவுக்கு பின் அரசியல் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை. தினம் ஒரு செய்தி என தமிழக மக்களை மீடியாக்கல் பரபரப்பாகவே வைத்துள்ளன. அதில் தற்போதைய செய்தி திவாகரனின் புதிய கட்சி துவக்கம். தினகரன் கட்சியை எதிர்த்து அவர் கட்சி துவங்கவேண்டிய காரணம் என்ன என்று பலரும் யோசித்தனர்.

இதில் தற்போது குடும்ப பிரச்சனை காரணமாகவே திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் இந்த புதிய கட்சி துவங்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இதுவரை தினகரன் பற்றி எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த ஜெயானந்த், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவருக்கு எதிராக கருத்துகளை கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலா குடும்பத்தினரி8டையே ஒரு வழக்கம் நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது, அதாவது நெருங்கிய உறவுகளுக்குள்ளேயே பெண் எடுத்து திருமணம் செய்து கொள்வது வழக்கம். தினகரன் கூட சொந்த தாய் மாமா மகளான அனுராதாவையே திருமணம் செய்து கொண்டார். தினகரனுக்கு திவாகரன் தாய் மாமா. அதாவது, தினகரனின் தாயாரின் சகோதரர்தான் திவாகரன். எனவே தனது மகன் ஜெயனாந்த்திற்கு தினகரனின் பெண்ணை திருமணம் செய்து வைக்க திவாகரன் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. தனது விருப்பம் குறித்து தினகரனிடம் திவாகரன் கூறியுள்ளார். ஆனால் திவாகரனிடம் மழுப்பலாக பதிலளித்து நழுவினாரம் தினகரன்.

முன்னதாக திவாகரன் தனது மகன் ஜெயானந்திற்கு பதவி கேட்ட்டும் அதற்கு பதில் கூறவில்லை தினகரன். இதனால் ஏற்பட்ட கோபமே தினரனுக்கு எதிராக திவாகரனை வெகுண்டெழச் செய்துள்ளது.