மாரி 2 படம் ரிலீஸ் மூலம் விஷால் மற்றும் சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் செக் வைத்திருப்பதாக கோடம்பாக்கத்தில் செய்தி கசிந்துள்ளது.

சண்டக்கோழி2 படம் வெளியான போது, தனுஷின் வட சென்னையும் வெளியானது. அப்போது, வட சென்னை படத்தை தள்ளி வைக்குமாறு விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம். ஆனால், தனுஷ் அதை ஏற்கவில்லை. அதோடு, சண்டக்கோழி2 சரியான வரவேற்பை பெறவில்லை. ஆனால், வடசென்னை வசூலை வாரியது. எனவே, வடசென்னை படத்தினால்தான் தன் படம் பிளாப் ஆனது என விஷால் கருதினாராம். எனவே, தனுஷ் மீது அவருக்கு கோபம் இருக்கிறது.

அதோடு, விஷால் கே.ஜி.எப் எனும் கன்னட படத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட இருக்கும் விஷால், டிச.21ம் தேதியைத்தான் குறித்து வைத்துள்ளாராம். ஏனெனில் 25ம் தேதி கிறிஸ்துமஸ் வருகிறது. 21 வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 5 நாட்களை வசூலை எடுத்துவிடலாம் என்பதாலேயே 21ம் தேதியை பலரும் தேர்வு செய்துள்ளனர். மாரி 2 படத்துக்கு 21ம் தேதியை இதுவரை தயாரிப்பாளர் சங்கம் உறுதி செய்யவிலை. ஆனால், என்ன நடந்தாலும் 21ம் தேதி மாரி2 வெளியாகும் என தனுஷ் கூறிவிட்டார்.

அதேபோல், மெரினா, மனம் கொத்தி பறவை என இரு படங்களில் நடித்திருந்தாலும், தனுஷ் தயாரிப்பில் உருவான எதிர்நீச்சல் படம் மூலமாகவே சிவகார்த்திகேயனுக்கு ஹீரோ வரிசை இடம் கிடைத்தது. அதன்பின் தனுஷின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை. இருவருக்கும் பிரச்சனை பலமுறை செய்திகள் வெளிவந்தது. ஆனால், இருவருமே அதை மறுத்தனர்.

தனுஷின் நண்பராகவும், அவரின் ஆஸ்தான இசையமைப்பாளராகவும் இருந்த அனிருத் சிவகார்த்திகேயனோடு நெருக்கமாகி, அவரின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வந்தார். இதனால், சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத்தை தனது எதிரிகளாகவே தனுஷ் பார்க்கிறார் என அவ்வபோது செய்திகள் கசிவதுண்டு…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கனா படம் வருகிற 21ம் தேதி திரைக்கு வருகிறது. இது சிறிய பட்ஜெட் படம். அந்த தேதியில் இப்படத்தை திரையிட தயாரிப்பாளர் சங்கமும் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சங்கத்தின் அனுமதி இல்லாமலேயே 21ம்தேதி தன் படம் மாரி2 வெளியாகும் என தனுஷ் அறிவித்துவிட்டார்.

அப்படி வெளியானால் மாரி 2 படத்திற்கே அதிக தியேட்டர்கள் கிடைக்கும். ‘கனா’ படம் காணாமல் போகும். இது தனுஷுக்கும் தெரியும். ஆனாலும் அவர் இதில் உறுதியாக இருப்பது சிவகார்த்திகேயன் மீதுள்ள அவருக்குள்ள கோபத்தையே காட்டுகிறது என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

எனவே, 21ம் தேதி மாரி2-வை ரிலீஸ் செய்தால் விஷால் முன்பு வெற்றி பெற்றது போல் ஆகிவிடும். அதேபோல் சிவகார்த்திகேயனுக்கும் செக் வைத்தது போல் ஆகிவிடும். சுருக்கமாக ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க தனுஷ் திட்டமிட்டிருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.