தமிழ்நாட்டில் பிறந்த எனக்கு தமிழில் சாதிக்க முடியவில்லையே- ரெஜினா வேதனை

தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ள நடிகை சமந்தா. இவா் தமிழ்நாட்டில்  சென்னை பல்லாவரத்தில் பிறந்தவா். அதே போல் சரவணன் இருக்க பயமேன் என்ற படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்த ரெஜினாவும் தமிழ் நாட்டை சோ்ந்தவா் தான். ஆனால் இவருக்கு தமிழ் சினிமாவை விட தெலுங்கு படங்களில் தான் அதிகமாக நடித்து வருகிறாா். அவா் தமிழ் சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை நிச்சியமாக பிடித்து, அதில் வெற்றி பெறுவேன் என்று கூறியிருக்கிறாா்.

ரெஜினா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மாநகரம் படத்தில் அவரது நடிப்பிற்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. விரைவில் திரைக்கு வரவுள்ள உதயநிதியுடன் நடித்த சரவணன் இருக்க பயமேன் படத்தை அடுத்து, நெஞ்சம் மறப்பதில்லை, சிலுக்குவாா் பட்டி சிங்கம், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், ராஜ தந்திரம் 2 உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறாா்.

கோலிவுட் சினிமா பற்றி அவா் கூறியதாவது, தமிழ் நாட்டில் பிறந்த என்னால் தமிழ் படங்களில் சாதிக்க முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. நான் தமிழ் சினிமாவில் எப்போதோ ஜெயிருத்திருக்க வேண்டும். நானும் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து இருக்க வேண்டியது. கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட ஒருசில தமிழ் படங்களில் நடித்தேன்.  அதன்பிறகு சாியான வாய்ப்பு அமையவில்லை. ஆனால் மாநகரம் படம் தான் எனது தமிழ் சினிமா வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது. சரவணன் இருக்க பயமேன் படத்தில் உதயநிதியுடன் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. அவரது நகைசுவை உணா்வு தனித்தன்மை வாய்ந்தது. மிகவும் எளிமையான மனிதா். அமைதியான மனிதா். அவா் எதை பேசினாலும் பாசிட்டிவாகவே இருக்கும்.

தமிழ் சினிமாவில் நான் எப்போதோ எனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்க வேண்டியது. அதற்கான நேரம் வராமல் தள்ளிகொண்டே போனது. தற்போது  அந்த பொன்னான நேரம் அமைத்து கொடுத்து விட்டாா் இறைவன். அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு ஜெயித்து காட்டுவேன் என்று கூறினாா்.