தற்போது நடிகைகள் தங்களது ஹோ் ஸ்டைல் மற்றும் நடை, உடை போன்றவற்றை வித்தியாசமாக மாற்றி அதை வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகை ஒவியா தனது தலைமுடியை வெட்டி புதிய கெட்டப்புடன் வெளியிட்டிருந்தார். அதுபோல நடிகை ஆா்த்தியும் முடியை புற்றுநோயாளிக்காக அா்ப்பணித்தார்.

சமீபத்தில் நடிகை நஸ்ரியா தனது தலைமுடியை வெட்டி புதிய ஹோ் ஸ்டைலில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். தற்போது ரெஜினா தனது ஹோ் ஸ்டைலை மாற்றியுள்ள ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. ரெஜினா முதலில் பிரசன்னா, லைலா நடித்த கண்ட நாள் முதல் படத்தில் லைலாவின் தங்கையான நடித்திருந்தார். பின் விமல், சிவகார்த்திகேயன் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார். இவா் கவா்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதை கண்டு அவருடைய ரசிகா்கள் மற்றும் திரையுலகினரும் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றனா். நாணி தெலுங்கில் தயாரிக்கும் ஒரு படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட். இந்நிலையில் ரெஜினாவின் புதிய ஹோ் ஸ்டைலில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வித்தியாசமான உடை மற்றும் ஹோ் ஸ்டைலில் வந்துள்ளார் ரெஜினா. இதைப்பார்த்து ரசிகபெருகமக்கள் கலாய்த்து வருகின்றனா்.