பிரபல பாப் பாடகர் ஒருவர் பாடிய இன் மை பீலிங்ஸ் என்ற பாடல் புகழ்பெற்றதன் மூலம் கிகி சேலஞ்ச் என்ற ஓடும் காரில் இருந்து இறங்கி டான்ஸ் ஆடும் நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

மக்களும் பாலிவுட், டோலிவுட்,கோலிவுட் பிரபலங்களும் இது போல ஓடும் காரில் இருந்து இறங்கி டான்ஸ் ஆடும் நிகழ்வு அதிகரித்து வருகிறது. சமீபமாக நடிகை ரெஜினா கூட இது போல டான்ஸ் ஆடியது குறிப்பிடத்தக்கது.

வட மாநிலங்களில் இது அதிகரித்து வருவதால் இது போல் டான்ஸ் ஆடுவது ஆபத்தானது இது போல கிகி பை சேலஞ்சை தவிர்க்க வேண்டும். இது போல செயல்களில் ஈடுபடக்கூடாது என மஹாராஷ்டிரா காவல்துறை அறிவித்துள்ளது.இது போல் கிகி சேலஞ்சில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.