மனசுல பட்டாம்பூச்சி, ஒரு ஸ்லொவ் மோஷன் ஷாட், ஹீரோயின் பார்வை, பேக்ரவுண்ட் மெலடி…… இதெல்லாம் என்னனு யோசிக்கிறீங்களா? இதுதான் காதலின் அடையாளமாக சினிமா முன்னிலைப்படுத்தும் விஷயங்கள்…. நிஜத்தில் ஒருவரை நமக்குப் பிடித்திருந்தாலும் அதை வெளிப்படுத்த தயங்குவோம், அவர் மேல் வரும் ஈர்ப்பு காதலா காமமா அல்லது வெறும் கவர்ச்சியா என்று தெரிந்துகொள்ள 5 கேள்விகள்…

1. ஏன் அவரை உங்களுக்குப் பிடிக்கிறது?

அவரிடம் உங்களை கவரும் விஷயம் என்ன என்பதை உங்களிடமே கேட்டு பாருங்கள். ஆடை அணியும் விதம், பேச்சு, முக வசீகரம், உடல் வாகு, சிரிப்பு என வெளி விஷயங்கள் அதிகம் கவர்கிறதா இல்லை நடந்துகொள்ளும் விதம், அவரின் செயல்கள் போன்ற குணம் சார்ந்த விஷயங்களா?

இதையும் படிங்க பாஸ்-  பெண்களைக் கவரும் 4 குணங்கள்

2. நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
அவரை பார்த்ததும் உங்களுக்கு ஏற்படும் முதல் உணர்வு என்ன என்பதை கவனியுங்கள். ஒருவித பதைபதைப்பு, கட்டி அணைக்கும் ஆவல், உடல் உறவுக்குத் தூண்டும் எண்ணங்களா அல்லது மாறாக ஒரு வித மன அமைதி, சௌகிரியமாகவும் அவரிடம் எதையும் பகிர்ந்துகொள்ளலாம் என்று உணர்கிறீர்களா?

இதையும் படிங்க பாஸ்-  திருமணத்திற்கு முன்பு உடலுறவு - நடிகர் கருத்தால் பரபரப்பு

3. நீங்கள் நீங்களாக இருக்கிறீர்களா?

நம் அனைவருக்கும் உண்மை குணம் ஒன்று உண்டு அது நமக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும். நமக்குத் துணையாக வருபவரிடம் நம் உண்மை குணத்தை வெளிப்படுத்துவது இயலபாக இருக்கும். அவரிடம் உங்களுக்கு இருப்பது கவர்ச்சி மட்டும் என்றால் உங்களை அவர்முன் மேம்படுத்தி காட்டவே விரும்புவீர்கள்.

4. சந்திப்பில் என்ன செய்வீர்கள்?

நீங்கள் தனிமையில் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் படுக்கையில் முடிகிறதா அல்லது ஒருவருக்கு ஒருவர் உங்களைப் பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் பேசுவதில் ஆர்வம் காட்டுகிறீர்களா?

இதையும் படிங்க பாஸ்-  ரொம்ப டென்ஷனா ஃபீல் பண்றீங்களா?... இதைப் படிங்க..

5. என்ன பேசுகிறீர்கள் ?

மற்ற எல்லா கேள்விகளை விடவுண்ல இது மிகவும் முக்கியமானதும் எளிதானதும் கூட. நீங்கள் பெரும்பாலும் பேசும் விஷயம் என்ன? பெரும்பாலும் படுக்கையறை இன்பம், உடல் தொடர்பானதாக உள்ளதா இல்லை அர்த்தமுள்ளதாக உள்ளதா?

இவை, ஒருவர் மீது உள்ள உங்கள் உணர்வைப் புரிந்துகொள்வதற்கான சில டிப்ஸ் மட்டுமே. உங்கள் மனமே சிறந்த வழிகாட்டி.