‘முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய ராம் குமாரின்
இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படம் ‘ராட்சசன்’ .
இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால்
நடிக்கின்றனர்.

கடந்த ஆண்டு 2016-ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.
அப்பொழுது ‘சிண்ட்ரெல்லா’ என்று தலைப்பு
வைக்கப்பட்டிருந்தது. பிறகு சில காரணங்களால், ‘ ராட்சசன்’
என்று தலைப்பு மாற்றப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  புதிய அவதாரம் எடுத்துள்ள அமலாபால்

‘ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி – ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

சைக்கலாஜிக்கல் த்ரில்லாக உருவாகும் இப்படத்திற்கு
ஜிப்ரான் இசையமைக்க, பி.வி.ஷங்கர் ஒளிப்பதிவு
செய்துள்ளார.இப்படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ்
வழங்கியுள்ளது .

இந்த நிலையில், நடிகர் விஷ்ணு விஷால்தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ராட்சசன்’ பட டிரெய்லரை வெளியிட்டிருக்கிறார். இந்த டிரெய்லர்
ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பையும்
அதிகரிக்க்ச் செய்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை: திடீரென அமலாபால் சொல்ல காரணம்?