நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சர்க்கார் சில நாட்களுக்கு முன் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றாலும்

சர்ச்சைக்குரிய சிகரெட் பிடிக்கும் காட்சி இப்படத்தின் போஸ்டரில் இடம்பெற்றிருந்ததால் அதை நீக்க பாமக உள்ளிட்ட கட்சியின் இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பலத்த எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் பசுமை தாயகம் அமைப்பினர் சுகாதாரத்துறையிடம் புகார் செய்தனர். இதை ஏற்றுக்கொண்ட பொது சுகாதாரத்துறை இப்படத்தின் போஸ்டரை சிகரெட் பிடிப்பது போல் வைக்க கூடாது நீக்க வேண்டும்

என கூறியதன் அடிப்படையில் அந்த போஸ்டர் நீக்கப்பட்டது சர்க்கார் படத்தின் அதிகார பூர்வ இணைய பக்கங்களில் இருந்தும் இப்போஸ்டர் நீக்கப்பட்டது.