வாயுத்தொல்லையால் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் தர்மசங்கடத்துக்கு உள்ளாவோருக்கான சிறப்பு மாத்திரைகளை பிரெஞ்ச் கம்பெனி ஒன்று அறிமுகம் செய்து வைத்துள்ளது.

செரிமான பிரச்சனைகளாலும், குடலில் சுரக்கும் அமிலத்தின் வேறுபாட்டாலும் பலருக்கும் இப்போதெல்லாம் வாயுத் தொல்லை பிரச்சனைகள் வர ஆரம்பித்துள்ளனர். இந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அலுவலகத்திலோ அல்லது சுற்றி 100 பேர் இருக்கும் பொது இடங்களிலோ தானும் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு உள்ளாகி மற்றவர்களையும் முகம் சுளிக்க வைக்கும் வண்ணம் நடந்துகொள்ள நேரிடலாம்.

அதனால்தான் இந்த பிரச்சனைகளைத் தீர்க்க பிரெஞ்ச் நாட்டு மருந்து நிறுவனம் புதிய மாத்திரைகளைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மாத்திரைகளை உண்டால் வாயு வெளியேறும் போது வரும் துர்நாற்றத்தை கட்டுப்படுத்தி மல்லிகைப் பூ மற்றும் சாக்லேட் பிளேவரில் நறுமனத்தைப் பரப்புமாம்.

கிட்டத்தட்ட 7 வருடங்களாக இதற்கான ஆராய்ச்சியில் இறங்கி இந்த மாத்திரைகளைக் கண்டுபிடித்துள்ளார் கிறிஸ்டியன் போனய்ன்செவல் எனும் மருத்துவ ஆராய்ச்சியாளர். இந்த மாத்திரைகளில் வேதிப்பொருட்களோ அல்லது உடலுக்குக் கேடு விளைவிக்கும் பொருட்களோ இல்லை எனவும் சாதாரணமான வாசனையூட்டும் பொருட்களை மட்டுமேக் கொண்டு உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், என்ன விலைதான் கொஞ்சம் அதிகம்…. 60 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையின் விலை 1500 ரூபாய் ஆகும்.