தேசிய விருதுகள் 2017ஆம் ஆண்டிற்கானது அறிவிக்கப்பட்டது. அந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் நம்ம இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு இரட்டை விருதுகள் அறிவிக்கப்பட்டன. டூ லெட் என்ற தமிழ் திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது. நேற்று நிகழ்ச்சி முடிந்ததும் குடியரசுத் தலைவா் சிலருக்கு மட்டும் விருதுகள் வழங்குவார் என்று கூறப்பட்டதால் விருது வழங்கும் விழாவை பலரும் புறக்கணித்து விட்டு சென்றனர். நேற்று நிகழ்ச்சி முடிந்ததும் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துடன் விருது பெற்றவா்கள் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிலையில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசிய விருதுகளை வென்ற சிலர் நேற்று இரவு குடியரசுத் தலைவருடன் என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீதேவி நடித்த மாம் திரைப்படத்திற்கான விருதை அவரது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். சிறந்த பாடகருக்கான விருதை யேசு தாஸ் பெற்றுக் கொண்டார்.

ராம் நாத் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு மணி நேரம் தான் கலந்து கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதற்கு பிறகு இந்த ஏற்பாடு எனவும் தெரிவிக்கபட்டது. ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட சிலருக்கு குடியரசுத் தலைவா் விருது வழங்கினார். அதன் பின் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படத்தை இசைப்புயல் தனது
ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஆஸ்கார் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி, சிலர் மட்டுமா? வருத்தம் என கருத்து தெரிவித்துள்ளார். மூத்த கலைஞரான பின்னணிப் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் அந்த புகைப்படத்தில் நின்று கொண்டிருப்பது குறித்து ரசிகா்கள் இப்படியா ஒரு மூத்த பாடகரை நிற்க வைப்பது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

சிலருக்கு மட்டும் குடியரசு தலைவா் விருது வழங்கி விட்டு, மீதயிருந்தவா்களுக்கு மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி, ராஜ்யவர்தன் சிங் ரதோர் விருதுகளை வழங்கினர். இந்த விருது விழாவை மலையாள நடிகர் ஃபகத் பாசில் உள்ளிட்ட 68 கலைஞர்கள் புறக்கணித்துள்ளனர். இசைப்புயல் ரகுமானின் ட்விட்டுக்கு ரசுல் பூக்குட்டியின் அளித்த கருத்து திரையுலகில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.