கமலஹாசன் நடிக்க மர்மயோகி என்ற திரைப்படம் பல வருடம் முன்பு தொடங்கவிருப்பதாகவும் இதை பிரமிட் சாய்மீரா நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது. பின்பு அப்படம் கை விடப்பட்டது.

இதில் த்ரிஷா ,ஸ்ரேயா ஆகியோர் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் விஸ்வரூபம் 2 வெளியாக சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த படத்தை வெளியிட தடைகோரி உயர்நீதிமன்றத்தில் பிரமிட் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் கமல் தரப்பில் திரும்பவும் மர்மயோகி படம் தொடங்க இருப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து இவ்வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.