Review Thirvam Webseries – மூலிகை பெட்ரோலை அடிப்படையாக கொண்டு ஜீ5 இணையதளத்தில் விரைவில் வெளியாகியுள்ள திரவம் வெப்சீரியஸின் டிரெய்லர் வீடியோ பற்றிய விமர்சனத்தை இங்கு காண்போம்…

தமிழில் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள பிரபல ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா இயக்கியுள்ள திரவம் வெப்சீரியஸ் வருகிற 21ம் தேதி ஜீ5 இணையதளத்தில் வெளியாகிறது. தற்போது டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு டிரெய்லர் என்பது முக்கிய காட்சிகளை நமக்கு காட்டி அந்த கதையில் நடிக்கும் கதாபாத்திரங்களின் அறிமுகம், கதாபாத்திரங்களின் தன்மை, முக்கிய கதாபாத்திரம் சந்திக்கும் பிரச்சனை ஆகியவற்றை காட்டி அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நடக்கப் போகிறது என்கிற பதட்டத்தை நம்மிடம் உருவாக்க வேண்டும். அதை திரவம் வெப்சீரியஸின் டிரெய்லர் நமக்கு சரியாக உணர்த்துகிறது.

திரவம் டிரெய்லர் கனக்கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்காகவே நிச்சயம் இயக்குனர் மற்றும் எடிட்டரையும் நிச்சயம் நாம் பாராட்ட வேண்டும்.

திரவம் வெப்சீரியஸில் பச்சை/மூலிகை பெட்ரோல் தயாரிக்கும் விஞ்ஞானி வேடத்தில் நடிகர் பிரசன்னா நடித்துள்ளார். சினிமாவில் மட்டுமே நடித்து வந்தவர் திரவம் மூலம் முதல் முறையாக டிஜிட்டல் உலகிற்குள் நுழைந்துள்ளார். மேலும், இந்துஜா, ஜான் விஜய், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ரவிப்பிரகாஷம் என்கிற நடுத்தர வயது ஆண் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளார். அழகான மனைவி, மகள் என எளிமையான, சாதாரண நடுத்தர வாழ்க்கை வாழும் சராசரி மனிதனை அவர் தனது நடிப்பில் பிரதிபலித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  வீட்டை விட்டு துரத்தி விட்டாள் ; தெருவில் வாழ்கிறேன் : நடிகை மீது தாய் பகீர் புகார்

பச்சை இலைகளிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் பிரசன்னா அதில் வெற்றி பெற்று விடுகிறார். ஆனால், அதை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அவர் முயலும் போது என்னென்ன சம்பவங்கள் நிகழ்கிறது என்பதை விளக்கும் கதையாக திரவம் அமைந்துள்ளது.

பிரசன்னா பச்சை பெட்ரோல் மோசடி செய்துவிட்டதாக நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் காட்சிகளும், அவரின் கண்டுபிடிப்பு வெளியே வந்தால் தங்களின் வியாபாரம் மொத்தமும் விழுந்துவிடும் என பெட்ரோல் ஆலை நிறுவன முதலாளிகள் அஞ்சும், காட்சிகளும், பிரசன்னாவை முடக்க பண முதலைகள் அரசியல்வாதிகளை எப்படி பயன்படுத்துகின்றனர், அதன் மூலம் பிரசன்னா எப்படி ஒடுக்கப்படுகிறார் என்கிற காட்சிகளும் டிரெய்லரில் காட்டப்பட்டுள்ளது.

பிரசன்னாவுக்கு உதவும் கதாபாத்திரத்தில் இந்துஜா, காளிவெங்கட், நாகேந்திர பிரசாத் உள்ளிட்ட சிலர் நடித்துள்ளனர். அரசியல்வாதியாக அழகம் பெருமாள். இதில், முக்கியமாக வில்லனாக காட்டப்பட்டிருக்கும் நடிகர் அச்சு அசலாக பிரதமர் மோடி போலவே இருக்கிறார். இயக்குனர் மறைமுகமாக நமக்கு எதை உணர்த்துகிறார் என்பது தெளிவாக புரிகிறது. இந்த தைரியத்துக்காகவே இப்படத்தின் இயக்குனர் அர்விந்த் கிருஷ்ணாவை பாராட்டலாம்.

இதையும் படிங்க பாஸ்-  சின்னத்திரையில் காலுான்றும் விஷால்!

கதையின் நோக்கத்தை டிரெய்லர் அழகாக நமக்கு உணர்த்துகிறது. நெருப்புள்ள சிகரெட் ஒன்று ஒரு பச்சை இலையின் மீது விழும். அந்த இலை பற்றி எரியும். எனவே, அந்த இலை பெட்ரோல் தயாரிக்க உதவும் என்பதை முக்கிய கதாபாத்திரம் உணர்வது போல காட்சி டிரெய்லரில் வருகிறது. இந்த காட்சிக்காகவே ஒளிப்பதிவாளரை தாராளமாக பாராட்டலாம்.

நாளுக்கு நாள் உயர்த்தப்படும் இந்த பெட்ரோலின் விலை எப்போது குறையும் என்கிற எதிர்பார்ப்பும், ஏக்கமும் வாகன ஓட்டிகள் அனைவருக்கும் இருக்கிறது. அதே சமயம் சாமானியர் ஒருவர் இயற்கையாக விளையும் இலைகளை கொண்டு எரிபொருள் தயாரித்தால் பெட்ரோல் நிறுவன முதலாளிகள், ஆளும் அரசுகளின் மூலம் இரும்புக்கரம் கொண்டு எப்படி அதை தடுக்கிறார்கள், அந்த விஞ்ஞானியை மனரீதியாக எப்படி ஒடுக்குகிறார்கள் என்பதை ‘திரவம்’ வெப்சீரியஸ் விளக்குகிறது என்பதால் டிரெய்லரை பார்க்கும் போது எப்போது சீரியஸை பார்ப்போம் என்கிற ஆவல் எழுகிறது.

திரவம் என்கிற தலைப்புக்கு கீழ் ‘The Cornered Man’ என்கிற ஆங்கில வார்த்தை எழுதப்பட்டுள்ளது. அதாவது, சுற்றி வளைக்கப்பட்ட மனிதன் என அதற்கு பொருள். இதுவே மொத்தக்கதையையும் உணர்த்தி விடுகிறது.

இதையும் படிங்க பாஸ்-  நடிகை சுரேகா வாணியின் கணவர் அதிர்ச்சி மரணம்...

இந்த கதையில் காட்டப்பட்டிருக்கும் ரவிப்பிரகாஷம் என்கிற விஞ்ஞானி  பச்சை பெட்ரோல் மோசடியில் சிக்க வைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு எண் 116/19ன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்படுவதுபோல காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

எனவே, இப்படி யாரேனும் துணிந்தால் அவர்களுக்கு ஆளும் அரசாங்கமும், அதிகார வர்க்கமும் மரணத்தையே பரிசாக அளிக்கும் என்பதை தைரியமாக திரவம் வெப்சீரியஸில் காட்டப்பட்டுள்ளது டிரெய்லரை பார்க்கும் போது நம்மால் உணரமுடிகிறது.

திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள ‘திரவம்’ வெப்சீரியஸில் விஞ்ஞானி ஒருவர் பச்சை பெட்ரோலை கண்டுபிடித்ததாக கூறி அதற்கு உரிமை கொண்டாட முயல அது எண்ணெய் வள நாடுகள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்துகிறது.

அவரின் கண்டுபிடிப்பு உண்மைதானா அல்லது அது போலி கண்டுபிடிப்பா?

வருகிற 21ம் தேதி ஜீ5 இணையதளத்தில் ‘திரவம்’ காணத்தவறாதீர்கள்

ரூ.35 மட்டுமே செலுத்தி ஒரு மாதம் முழுவதும் பல தமிழ் இணைய தொடர்களை நீங்கள் கண்டு ரசிக்கலாம்!

https://www.zee5.com/