கமலஹாசன் நடித்த கன்னியாகுமரி என்ற மலையாளப்படத்தில் அவருடன் ஜோடியாக நடித்தவர் ரிதா பாதுரி. பாலிவுட் நடிகையான இவர் கமலஹாசனுடன் பல வருடம் முன்பு வந்த கன்னியாகுமரி படத்தில் ஜோடியாக நடித்தார்.

ரிதா பாதுரி 70களில் வெளியான ராஜா, ஜூலி, தில் வில் பியார் வியார் உட்பட சுமார் 70 இந்தி படங்களில் நடித்துள்ளார். 90ம் ஆண்டு வரை துணை நடிகையாக நடித்து வந்த இவர், சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார்.

 

இந்தி சீரியல்களில் தற்போது நடித்து வந்த ரிதா, கடந்த சில நாட்களாக சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவரது உடல் மும்பை அந்தேரியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.