65வது இந்திய தேசிய திரைப்பட விழாவில் அஸ்ஸாமிய மொழியில்
வெளிவந்த ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ சிறந்த திரைப்படமாக
விருது வாங்கியுள்ளது.

இப்படம் அசாமிய மொழியில் ரீமா தாஸ் இயக்கத்தில்
வெளிவந்தது. ‘வில்லேஜ் ராக்ஸ்டார்’ படத்தை 2019ல்
நடைப்பெற உள்ள ஆஸ்கர் விருதுக்கு இந்திய திரைப்படத்தை
ஆஸ்கருக்கு அனுப்பும் குழு பரிந்துரை செய்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற திரைப்பட விழாவில், “ராஸி,
பத்மவாத் ஹிச்சி, அக்டோபர், லவ் சோனியா, குலாப்ஜாம்,
நடிகையர் திலகம் , பிஹு, கட்வி ஹவா, போகாடா, ரேவா,
பயோஸ்கோஸ்கோவாலா, மாண்டோ, 102 நாட் அவுட், பட்மன்,
பயானகம், அஜ்ஜி, நாட் மற்றும் காளி குலியியன் ” முதலிய
படங்கள் திரையிடப்பட்டன.

இதில், ஆஸ்கர் பரிந்துரைக்கு ரீமா தாஸ் இயக்கிய ‘வில்லேஜ்
ராக்ஸ்டார்’ படம் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம்
பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.