குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மாதவன் நடிப்பில் ரித்திகா சிங் நடித்த இந்த படமும் குத்துச்சண்டை படம் தான். ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய்சேதுபதியுடனும், சிவலிங்கா படத்தில் லாரன்ஸ்சுடன் நடித்தார். வணங்காமுடி படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

சினிமாவாய்ப்புகள் எதிர்பார்த்த வகையில் அமைந்த காரணத்தால் ரித்திகா சிங் தற்போது குறும்படத்தில் நடித்திருக்கிறார். பெண்களுக்கு தினந்தோறும் நடக்கும் பாலியல் சம்பந்தமான பிரச்சனைககளை பேசுகிற குறும்படம் ஐ யம் சாரி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது பாலிவுட் கலைஞா்கள் இணைந்து உருவாக்கியுள்ளனா். மியூசிக்கல் குறும்படமாக உருவாகியுள்ள இதை தேசிய விருது பெற்ற அஷ்வின் சதுர்த்தி இயக்கி இருக்கிறார்.

நானும் ஒரு பெண் என்பதால் பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் இந்த படத்தில் ஆா்வமுடம் நடித்தேன்.பெண்கள் தற்காப்பு கலை பயில வேண்டும் நான் ஒவ்வொரு தடவையும் கூறி வருகிறேன். அதை பலமாக சொல்ல இந்தப்படம் உதவியது எனக் கூறியுள்ளார் ரித்திகா சிங். மகளிர் தினமான இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.