அனிதா மரணம்: டுவிட்டரில் வாங்கிக் கட்டிகொண்ட ரித்திகா சிங்

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் அனிதா. மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்தவருக்கு நீட் என்னும் வடிவில் வந்த எமன் அவரது உயிரை பறித்துவிட்டான். பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வால் தனக்கு மருத்துவ படிப்பு கனவு வீணாகிவிட்டதே என்ற விரக்தியில் இருந்தவர், அதற்கு எதிராக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து போராடினார். ஆனால், நீதிமன்றம் அவருக்கு கருணை வழங்க மறுத்துவிட்டது.

முடிவு, இன்று அனிதா மனஉளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் இந்த தற்கொலை தமிழகத்தையே உலுக்கியுள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அரசுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அனிதாவின் மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில்,  நடிகை ரித்திகா சிங் போட்ட ஒரு ட்வீட்டால்  நெட்டீசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்.

 

அவர் டுவிட்டரில், மார்க் மட்டுமே வாழ்க்கையில்லை, படிப்பில் பாதியில் நிறுத்தியவர்கள் தான் உலகத்தில் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளனர்’ பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்தவர்கள்  முதலில் எதற்காக அனிதா தற்கொலை செய்துகொண்டார் என தெரிந்துகொண்டு பிறகு பேசுங்கள் என அவரை திட்ட ஆரம்பித்தனர்

இதனைக் கண்ட  ரித்திகா  எனக்கு எல்லாம் தெரியும். ஒரு உயிர் போனது பற்றி பேசினேன் என கூறியுள்ளார்.