பாரதிராஜாவின் தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் ரியா சென்.அதற்கு பின் பிரசாந்த உடன் குட்லக் படத்தில் நடித்தாா். இந்தி, பெங்காலி, மராட்டிய படங்களில் நடித்தாா். இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவா்.

கொல்கத்தா ரசகுல்லா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. சில படங்களில் மட்டும் நடித்தவர் சொந்த ஊருக்கு மூட்டை கட்டினார். நீண்ட நாட்களாக அவரை பற்றிய செய்திகள் இலாமல் இருந்தது. இந்த சூழ்நிலையில் ரியா சென் ஷிவம் திவாரி என்ற செல்வந்தரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் செய்திகள் வந்தன.

இந்த நிலையில் இவர்கள் இருவரது திருமணமும் இன்று நடைபெற்றது. இரு வீட்டார் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர்.