பிக்பாஸ் வீட்டில் மெட்ராஸ் புகழ் ரித்விகா

riythvika

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசன் இன்று விஜய் தொலைக்காட்சியில் இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிறார்.

பிக்பாஸ் 2ல் யார் யாரெல்லாம் கலந்துகொள்ளபோகிறார்கள் என்று அனைவரும் காத்திருக்கின்றனர். பாலாஜி,அவரது மனைவி,மும்தாஜ், பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோரது பெயர்கள் மட்டும் உறுதியாக கூறப்பட்டது. தற்போது 7 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம்,மஹத்,டேனியல்,வைஷ்ணவி,ஆனந்த் வைத்தியநாதன், ஜனனி ஐயர்,ரம்யா மற்றும் நடிகர் சென்ட்ராயன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். தற்போது 10 வது போட்டியாளராக மெட்ராஸ் புகழ் நடிகை ரித்விகா பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார்.