எம்ஜிஆர் மனைவியாக நடிக்க உள்ள பிக்பாஸ் நடிகை ரித்விகா!

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாறு எம்ஜிஆர் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாவாக பிக்பாஸ் வீட்டில் தற்போது உள்ள ரித்விகா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் முதல்வர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை காமராஜ் என்ற பெயரில் ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. அதேப்போல இந்த எம்ஜிஆர் படத்தையும் இந்த நிறுவனத்தின் சார்பாக அ.பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்குகிறார். இதில் எம்ஜிஆர் போன்று முகத்தோற்றம் உடைய பிரபல விளம்பர நடிகர் சதீஷ்குமார் எம்ஜிஆராக நடிக்கிறார்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்கள், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் பாத்திரங்களில் நடிக்க நடிகர், நடிகையர்கள் தேர்வு நடந்து வருகிறது. மேலும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாவாக பிக்பாஸ் வீட்டில் தற்ப்போது உள்ள நடிகை ரித்விகா நடிக்க உள்ளார்.