மூதாட்டியிடம் பணம் பறித்த வாலிபர் நகைகளை பறித்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

யாருமற்ற தெருவில் செல்போன் பேசிக்கொண்டிருந்த ஒரு மூதாட்டியிடம் முகவர் கேட்பது போல் நடித்து தங்க செயினை ஒருவன் பறித்து சென்ற வீடியோ சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்தது.

சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த மோட்டார் சைக்கிள் எண் மூலம் கேரள போலீசார் ஒருமணி நேரத்தில் அவனை கைது செய்துள்ளனர். திருவனந்தபுரம் பூஜாபுரா பகுதியை சேர்ந்த சஜீத் என்பதும், அவன்தான் மூதாட்டியிடம் நகையை பறித்து சென்றதையும் போலீசார் உறுதி செய்தனர். அதன்பின் அவன் கைது செய்யப்பட்டான். ஒருமணி நேரத்தில் அவன் கைது செய்யப்பட்டதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

விசாரனையில் தனியாக வரும் பல பெண்களின் நகையை பறித்து சென்றது தெரியவந்துள்ளது. அப்படி பறித்து செல்லும் நகைகளை விற்று அதில் கிடைக்கும் பணத்தை வட்டிக்கு விட்டு சஜீத் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.