இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஆசிய கோப்பை தொடருக்கான போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் கேப்டன் பொறுப்பு ரோஹித் ஷர்மாவிடம் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனக்கு பிடித்த வீரர் யார் என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  தினேஷ் கார்த்திக்கிடம் அமிதாப் மன்னிப்பு கேட்டது ஏன்?

ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் விரைவில் வர உள்ள நிலையில் அதற்கான இந்திய அணியை நேற்று அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம். இதில் கேப்டனாக ரோஹித் ஷர்மா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதையடுத்து டுவிட்டரில் ஆஸ்க்ரோ என்ற தலைப்பில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ரோஹித்.

இதையும் படிங்க பாஸ்-  ஏழாவது முறையும் வெற்றி - சாதனையைத் தக்க வைத்த கோஹ்லி & கோ !

அதில் இந்தத் தலைமுறை வீரர்களுள் யாருடைய ஆட்டத்தைப் பார்க்க உங்களுக்குப் பிடிக்கும் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஏபி டி வில்லியர்ஸ்தான் என பதிலளித்தார் ரோஹித் ஷர்மா. இதனையடுத்து அந்த ரசிகரும் இந்த பதிலைத்தான் தான் எதிர்பார்த்ததாக கூறினார்.

இதையும் படிங்க பாஸ்-  இப்படியே போனால் நாட்டுக்குள் செல்ல முடியாது – புலம்பும் பாகிஸ்தான் கேப்டன் !

ரோஹித் ஷர்மா ஒரு நாள் போட்டிகளில் அதிகமுறை இரட்டை சதம் அடித்த வீரர் என்ற அரிய சாதனைக்கு சொந்தக்காரர். அவர் களத்தில் இறங்கினாலே எதிரணியினர் ஒருவித கலக்கத்தில் தான் இருப்பர். அந்த அளவுக்கு அதிரடியாக ரன் குவிப்பவர்.