ஆந்திர அரசியலில் ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் கட்சியில் இணைந்து சிறப்பாக பணியாற்றிய ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்படலாம் என செய்திகள் கசிந்துள்ளது.

ஆந்திராவில் நடந்து முடிந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. பல தொகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றி பெற்றது. இதையடுத்து கடந்த 30ம் தேதி ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க பாஸ்-  அமைச்சர் பதவி கொடுக்காத சோகத்தில் இருந்த ரோஜா சமாதானம் – பின்னணி என்ன ?

ஆனால், இன்னும் அமைச்சரவை அமைக்கப்படவில்லை. நடந்து முடிந்த தேர்தலில் ஆந்திராவின் பல தொகுதிகளிலும் ஒய்.எஸ்.ஆர் கட்சியை கொண்டு சேர்த்ததில் ரோஜாவுக்கு பெரும் பங்கு உண்டு. மேலும், நகரி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏவாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க பாஸ்-  எந்த பதவியும் இல்லை - ரோஜாவுக்கு கல்தா கொடுத்த ஜெகன் மோகன் ரெட்டி

இந்நிலையில், தற்போது அவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இன்று நடந்து முடிந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.