மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் வீடியோ இதுவரை எந்த வீடியோவும் செய்யாத சாதனையை நிகழ்த்தியுள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான மாரி 2 படத்தில் தனுஷ், சாய் பல்லவி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யுடியூபில் வெளியிடப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை சினிமா ரசிகர்கள் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோவாக ‘ஒய் திஸ் கொலைவெறி’ பாடல் இருந்தது. இப்பாடல் தற்போது வரை 175 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த சாதனையை ரவுடி பேபி பாடல் முறியடித்துள்ளது. இதுவரை 183 மில்லியன் பார்வையாளர்களை இந்த வீடியோ பெற்று சாதனை படைத்துள்ளது.