பிரபல நடிகை மற்றும் ஆந்திர மாநில அரசியல்வாதியுமான ரோஜாவின் ஐதராபாத் வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

நேற்று ரோஜா தனது குடும்பத்தினர்களுடன் வீட்டை பூட்டிவிட்டு சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்துவிட்டு சென்னை சென்றனர். மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அலமாரி உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியாகினர்

இதுகுறித்து ரோஜாவின் கணவர் செல்வமணி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ரோஜா வீட்டில் வேலைபார்த்த ஒருவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.