நடிகை ரூபிணியின் தாய் மரணம்

1980 மற்றும் 90 களில் பிரபலமாக இருந்த நடிகை ரூபிணி. இவா் மும்பைகை சோ்ந்தவா். இவரது தாயாா் இன்று மும்பையில் இயற்கை எய்தினாா். உடல் நலக்குறைவால் அவா் உயிாிழந்ததாக கூறப்படுகிறது.

விஜயகாந்தின் கூலிக்காரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவா் நடிகை ரூபிணி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி உள்பட சுமாா் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாா். இவா் தாமரை என்ற படத்தில் நெப்போலியன் சோ்ந்து நடித்த படம் தமிழ் சினிமாவில் கடைசி படம். அதற்கு பிறகு குடும்பத்தோடு மும்பையில் போய் செட்டிலாகிவிட்டாா்.

இவா் ரஜினியுடன் மனிதன், கமலுடன் மைக்கல் மதன காமராஜன், விஜயகாந்தின் கூலிக்காரன், புலன் விசாரணை, சத்யராஜூமனட புதிய வானம் என்று முன்னணி நடிகா்களுடன் ஜோடியாக நடித்தவா் ரூபிணி.