தமிழ்த்திரையுலகில் நீண்ட நாளாக பின்னணி பாடி வருபவர் எஸ்.ஜானகி அவர்கள். கருப்பு வெள்ளை காலத்தில் பாடல் பயணம் ஆரம்பமாகி தொடர்ந்து பாடல்களின் பொற்காலமான எண்பதுகளில் தமிழ் பாடல்களை கலக்கி எடுத்தவர் ஜானகி அம்மா அவர்கள்.

மிக இனிமையான குரலுக்கு சொந்தக்காரர் ஜானகி அவர்கள். குழந்தை போல் திடீரென மாறி பாடக்கூடியவர் அப்படி இவர் பாடிய டாடி டாடி ஓமை டாடி,டூத்பேஸ்ட் இருக்கு பிரஷ் இருக்கு போன்ற பாடல்கள் குழந்தையின் குரல் போலவே இருக்கும்.

பல்லாயிரக்கணக்கான விருதுகளையும் பல்லாயிரக்கணக்கான பாடல்களையும் தமிழ்,தெலுங்கு,மலையாள மொழிகளில் பாடியுள்ளார்.தாமதமாக வழங்கப்படும் விருதுகள் தனக்கு தேவையில்லை என முந்தைய காங்கிரஸ் அரசால் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விருதுகளை புறக்கணித்தவர்.

இந்நிலையில் எஸ்.ஜானகி அவர்களின் உடல் நிலை பற்றி நேற்று சமூக வலை தளங்களில் பரவிய தவறான வதந்தியால் அவரின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கலக்கமடைந்தனர்.இது  பற்றி ஜானகி அவர்களே கூறும்போது தம் மீது அதிக அன்புடன் பலர் தொலைபேசியில் விசாரிப்பதாகவும் அடுத்தவருக்கு மாரடைப்பு ஏற்படும் அளவுக்கு வதந்திகளை பரப்பாதீர்கள் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.