சரக்கு அடித்துக் கொண்டே பேசினார் விஷால் – தாணு பகீர் தகவல்

சரக்கு அடித்துக் கொண்டே பேசினார் விஷால்

தயாரிப்பாளர் சந்திப்பு ஒன்றில் நடிகர் விஷால் சரக்கு அடித்துக் கொண்டே பேசினார் என தயாரிப்பாளர் எஸ்.தாணு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமா பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இதில் விஷால் தலையில் ஒரு அணி, கே.ஆர் தலைமையில் ஒரு அணி, ராதாகிருஷ்ணன் அணி என மொத்தம் 3 அணிகள் போட்டியிடுகிறது.

ஏற்கனவே நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு சரத்குமார் மற்றும் ராதாரவி தரப்பின் ஏராளமான புகார்களை கூறி, அவர்களுக்கு எதிராக களம் இறங்கி அதில் வெற்றியும் பெற்ற விஷால், தற்போது தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அதன் தலைவர் தாணு ஆகியோருக்கு எதிராக களம் இறங்கி, ஒரு அணியை உருவாக்கி போட்டியிடுகிறார். அவர் அணியில் இயக்குனர் மிஷ்கின், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன் உள்ளிட்டோர் உள்ளனர்.

இந்நிலையில், ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவு திரட்டுவதற்காக நேற்று சென்னை க்ரீன் பார்க் ஹோட்டலில் தயாரிப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, அந்த அணிக்கு ஆதரவாக எஸ். தாணு பேசினார். அப்போது அவர் விஷால் பற்றிய பல புகார்களை கூறினார்.

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தின் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். தயாரிப்பாளர்களுக்காக அவர் எதுவும் செய்யமாட்டார். தொடர்ச்சியாக அவர் நடித்த 10க்கும் மேற்பட்ட படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது. அவரை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் தற்போது தெருவில் நிற்கின்றனர். அவர்களுக்காக எதுவும் செய்யாத விஷால், எப்படி மற்ற தயாரிப்பாளர்களுக்கு உதவுவார்?. ஒருமுறை, ஒரு சிறு தயாரிப்பாளர் தன்னுடைய சொத்தையெல்லாம் விற்று விஷாலை வைத்து ஒரு படம் எடுக்க நினைத்தார். அது தொடர்பாக விஷாலை சந்திக்க என்னையும் அவருடன் அழைத்து சென்றார்.

நானும், அவரும் நீலாங்கரையில் இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை காத்திருந்தோம். விஷால் 10.30 மணிக்கு வந்தார். கால தாமதமாக வந்ததற்கு ஒரு வருத்தம் கூட அவர் தெரிவிக்கவில்லை. மேலும், வந்தவுடன் சரக்கு கோப்பையோடு பேசத் தொடங்கினார். எனவே, அப்போதே “ இது சரி வரும் எனத் தோன்றவில்லை. எனவே, இந்த படம் வேண்டாம்” என அந்த தயாரிப்பாளரிடம் கூறினேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு விஷாலை வைத்து படம் எடுக்கும் முடிவு கைவிட்டு விட்டார்.

இப்படி, தயாரிப்பாளர்களை மதிக்காத விஷால் தற்போது அவர்களுக்கு அது செய்வேன், இது செய்வேன் என பேசிவருவது வேடிக்கையாக இருக்கிறது” எனப் பேசினார்.