யானை மற்றும் புலியைத் தத்தெடுத்துள்ள கன்னட நடிகர்

பிரபல கன்னட நடிகர் சீனிவாசனின் மகனான சாலஞ்ஜிங் ஸ்டார் எஸ். தர்ஷன்2001 இல் மெஜஸ்டிக் படம் மூலம் கன்னட திரையுலகில் ஹீரோவாகி ஜக்கு தாதா (2016) மற்றும் சக்கரவர்த்தி (2017) என்ற படங்களில் நடித்துள்ள இவர் சமீபத்தில் மைசூர் விலங்கியல் பூங்காவில் 2.75 லட்சம் செலுத்தி ஒரு யானை மற்றும் புலியை ஜூலை 20 வரை ஒரு வருடத்திற்குத் தத்தெடுத்துள்ளார்.

தற்போது அந்த மைசூர் பூங்காவில் 9 ஆசிய யானைகளும் 14 புலிகளும் உள்ளதாக கணக்கெடுப்பு விவரங்கள் தெரிவிக்கிறது.

பூங்காவின் டைரக்டர் ரவி ஷங்கர் இதைப் பற்றி கூறுகையில், தர்ஷனின் இந்தச் செயல் சக நடிகர்களையும் ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எஸ். தர்ஷன் 2013 ஆண்டில்கிரண்டிவிரா சாங்கோலி ராயன்னா என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருது உட்பட பல விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.