எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள முதல் யூ சான்றிதழ் பெற்ற படமாக மான்ஸ்டர் வெளியாகியுள்ளது.

எஸ் ஜே சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் இரவாக் காலம் ஆகியப் படங்கள் தயார் நிலையில் இருந்தாலும் ரிலிஸ் ஆகாமல் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அவர் நடித்துள்ள மான்ஸ்டர் படம் மே 17 ஆம் தேதி ரிலிஸ் ஆக இருக்கிறது.

இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய எஸ் ஜே சூர்யா ‘ என் நடிப்பில் முதல் முதலாக யூ சான்றிதழ் பெற்ற படம் ஒன்று உருவாகியுள்ளது. வாலிப் படத்தின் தயாரிப்பாளர் சக்ரவர்த்தி என்னிடம் உங்கள் படத்துக்கு யு என்று பெயர் வைத்தால்தான் உண்டு. யு சான்றிதழ் எல்லாம் கிடைக்காது என என்னைக் கேலி செய்வார். வெற்றியும் தோல்வியும் நம் கையில் இல்லை. ‘ எனக் கூறியுள்ளார்.

எஸ் ஜே சூர்யாவோடு இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் , கருணாகரனோடு முக்கிய வேடத்தில் எலி ஒன்றும் நடித்துள்ளது.இந்த படத்தை ஒரு நாள் கூத்து படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்க எஸ் ஆர் பிரபு தயாரித்துள்ளார்.