அமெரிக்காவில் பாஸ்போர்ட்டை தவற விட்ட எஸ்.பி.பி….

08:25 காலை

இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றுள்ள பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அங்கு பாஸ்போர்ட்டை அடங்கிய தனது பையை தவற விட்டுள்ளார்.

எஸ்.பி.பி தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து லாஸ் ஏஞ்செல்ஸ், சான் ஜோஸ், தலாஸ், கன்சாஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், அங்கு தனது பாஸ்போர், டெபிட் கார்டு, கடன் அட்டை, ஐபேட், இசை குறிப்புகள் அடங்கிய பையை அவர் தவற விட்டு விட்டதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்த இடத்தில் அவர் தவற விட்டார் என்பது குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

அதே நேரத்தில், இது பற்றி அவர் அங்கிருக்கும் இந்திய தூதரகத்தில அவர் புகார் அளித்தவுடன், 24 மணி நேரத்தில் அவருக்கு மாற்று பாஸ்போர்ட்டை அவர்கள் வழங்கியுள்ளதாகவும், அதற்கு நன்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

The following two tabs change content below.
மகாலட்சுமி
இவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com