தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜனுக்கும், பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது.

பாஜக தலைமை அலுவகத்தில் தன்னை அழைப்பதே இல்லை என எஸ்.வி.சேகர் சமீபத்தில் புகார் கூறியிருந்தார்.இது பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.

இதை ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவருக்கு பதில் கூறியுள்ள எஸ்.வி.சேகர் “பரவாயில்லை விடுங்க. இன்னும் கொஞ்ச நாள்தானே” என டிவிட் போட்டிருந்தார்.

எனவே, தமிழிசை இன்னும் கொஞ்ச நாள்தான் அந்த பதவியில் இருப்பார் என எஸ்.வி.சேகர் சூசமாகவே தெரிவித்துள்ளார். அதே நேரம், இதைக்கண்ட நெட்டிசன்கள்.. ‘ ஏன்.. காங்கிரஸுக்கு மாறப் போறீங்களா’ எனவும் இன்னும் கொஞ்ச நாள் இருக்கப்போறது எது? மோடி ஆட்சியா இல்ல தமிழிசை பதவியா? என அவரிடம் கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.