Home சற்றுமுன் இதுதான் சாமி2 படத்தின் கதையா?

இதுதான் சாமி2 படத்தின் கதையா?

விக்ரம் திரிஷா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான படம் சாமி. கவிதாலயா தயாரிப்பில் ஹரி இயக்கிய இந்த படம் சூப்பர் ஹிட் அனது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து அதே கூட்டணி தற்போது சாமி2வில் இணைந்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் கதை குறித்து இணையத்தில் பல்வேறு வதந்திகள் உலா வந்தன,

சாமி முதல் பாகத்தில் திரிஷா நடித்திருந்தார். இந்த படத்திலும் அவர் தான் நடிக்க இருந்தார். ஆனால் அவரது கேரக்டர் இறந்து விடுவது போல காட்சி உள்ள காரணத்தால் அதனால் நடிக்க மறுத்து விட்டார் திரிஷா. தற்போது சாமி 2 படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி, பிரபு, டெல்லி கணேஷ், ரமேஷ் கண்ணா, சுமித்ரா, உமா ரியாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் ஹரி, விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது ஹரி பேசுகையில், பெருமாள் பிச்சை குடும்பத்துக்கும்,ஆறுச்சாமி குடும்பத்திற்கும் நடக்கும் பிரச்னைதான் சாமி 2 படத்தின் மைய கதை என்று போட்டுடைத்தார். மேலும் இதனை வேகமான திரைக்கதை மூலம் காட்சிகளை பரபரப்பாகியுள்ளோம் என்றும் கூறினார்.