சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்தீர்ப்பை வழக்கம்போல் ஒருசிலர் ஆதரிக்க, ஒரு சிலர் எதிர்க்க என இரண்டு நிலைகளில் உள்ளது.

சமூக ரீதியான பிரச்சினைகளுக்கு கருத்து தெரிவிக்கும் கஸ்தூரியும் இவ்விஷயத்திற்கு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என தனது கருத்தை கூறியுள்ளார். இருப்பினும் அவரது கருத்தை கேட்ட ஒரு தனியார் ஊடகம் பெண்களின் உடை குறித்தும் வரைமுறைகள் வகுக்க வேண்டும். மற்ற ஐயப்பன் கோயில்களுக்குச் செல்வது போல, புடவை, சல்வார் கமீஸ், பேண்ட் – சட்டை அணிந்து வரவும் அனுமதிக்க வேண்டும்” என்று கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது இதை பார்த்த கஸ்தூரி இதை மறுத்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  இன்னும் சில மணி நேரங்களில் பிக்பாஸ் 2 டீஸர்

பெண்கள் செல்வதால் தவறில்லை என தான் நான் சொன்னேன் சல்வார் கமீஸ் போன்ற உடை குறித்தெல்லாம் நான் எதுவும் சொல்லவில்லை. அதை திரித்து  அந்த நிறுவனம் வெளியிட்டு இருப்பதாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி கூறியதாக சொல்லப்படும் செய்தியும்

அதற்கு மறுப்பு தெரிவித்த கஸ்தூரியின் டுவிட்டும்