சபரிமலை கோவிலுக்குள் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இது ஒரு பக்கம் எதிர்ப்பையும் ஒரு பக்கம் ஆதரவையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் இத்தீர்ப்பு குறித்து பேசிய மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், கூறியதாவது

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என யார் விரும்பினாலும் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்
அந்தக் கோவிலுக்கு  நான் இதுவரை சென்றதில்லை. ஆனால், கோவிலுக்குள் செல்ல வேண்டும் என யார் விரும்பினாலும் அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். அது தான் கடவுள் தன்மை என நினைக்கிறேன் என்றார்.