டெல்லியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சப்னா சவுத்ரி எனும் கவர்ச்சி ஆல்ப நடிகை.

வடமாநிலங்களில் சப்னா சவுத்ரியின் கவர்ச்சி ஆல்பங்கள் மற்றும் ரெக்கார்ட் டான்ஸ்கள் மிகவும் பிரபலம். கவர்ச்சியான பாடல்களைப் பாடி நடனமாடி அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவது வழக்கம். அதற்காக இவருக்கு ரசிகர்கள் உருவான அளவுக்கு விமர்சனங்களும் எழுந்தன.

சமீபகாலமாக இவர் பல சர்ச்சைகளில் சிக்கிய நிலையில் இப்போது பாஜகவில் இணைந்தார். டெல்லி மற்றும் வட மாநிலங்களில் அதிகளவில் இளைஞர்களை சேர்க்க பாஜக எடுத்துவரும் நடவடிக்கைகளில் ஒன்றாக சப்னாவை கட்சியில் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.