சமீப நாட்களாக சினிமா நடிகர்கள் பலர் சினிமா மட்டுமல்லாது நாட்டு நடப்புகள் சம்பந்தமான விசயங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர், பிரகாஷ்ராஜ், கமல், மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் சமூகம் சார்ந்த பொதுப்பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இது போல விவேக்கும் மரம் நடுவது, பொது பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பது என செய்து வருகிறார். சமீபத்தில் சென்னை அயனாவரத்தில் நடந்த ஒரு வாய் பேச முடியாத சின்னப்பெண்ணுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து விவேக்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் பெற்றோர் தங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் சமூக வலைதளங்களில் ஆபாசம் கொட்டி கிடக்கிறது அதிலிருந்து தங்களது குழந்தைகளை குறிப்பாக பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.