பிரபல சமூக சேவகரான டிராபிக் ராமசாமி என்றால் சென்னையில் தெரியாதவர்கள் இருக்க முடியாது இந்த நிலையில் அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்று ‘டிராபிக் ராமசாமி’ என்ற பெயரில் தயாராகி வருவது தெரிந்ததே. இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. .

இந்த டீசரை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் வெளியிட்டுள்ளார். ஒரு நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி, ஊழலுக்கு எதிராக போராடு ஒருவரின் திரைப்படத்தை வெளியிடுவது பொருத்தமானது என்று படக்குழுவினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக பிரபல இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகைரோகினி நடிக்கிறார் . மேலும் ஆர்.கே.சுரேஷ், உபாசனா, இமான் அண்னாச்சி, அம்பிகா, சார்லஸ் வினோத், மோகன்ராம், தரணி, சேத்தன், அம்மு, பேபி ஷெரின், விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர், கஸ்தூரி, மனோபாலா, மதன்பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில் குஷ்பு, சீமான், பிரகாஷ்ராஜ், விஜய் ஆண்டனி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.