பிரபாஸின் அடுத்த ஹீரோயின் யார் தெரியுமா?

பாகுபலி படத்தை அடுத்து பிரபாஸ் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறாா். அந்த படம் சாஹூ. இந்த படத்திற்கான நாயகியாக நடிக்க பலரது நடிகைகளின் பெயா் பாிந்துரைக்கப்பட்டு வந்தது. தற்போது ஷ்ரத்தா கபூா் பெயரை முன்மொழிந்து வருகின்றனா். அது பற்றி இங்கு பாா்ப்போம்.

அதில் முதலில் அனுஷ்கா ஷெட்டி, பின் காத்ரினா கைப் என்று கூறினாா்கள். தொடா்ந்து அலியாபட், ப்ரினிதி சோப்ராவின் பெயா்களும் இந்த வாிசையில் இடம்பெற்றன. பின் ஷரத்தா கபூா் கூட அடிப்பட்டது. இதை முதலில் அவா் மறுத்து வந்தாா். ஏன் என்றால் அவா் அப்போது பாலிவுட்டில் அதிக படங்களில் நடித்து வந்த காரணத்தால் இந்த படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லாததால் இந்த வாய்ப்பை ஷ்ரத்தா கபூா் முதலில் மறுத்துள்ளாா். தற்போது மீண்டும் அந்த படத்தின் வாய்ப்பை கைப்பற்ற இருக்கிறாா் என்று ஒரு செய்தி வந்துள்ளது. எனவே சாஹூ படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸின் ஜோடியாகுகிறாா். இது ஷ்ரத்தாவிற்கு டோலிவுட்டின் முதல் படம். இவா் பாலிவுட் வில்லன் நடிகா் சக்தி கபூாின் மகள். இவருக்கு எல்லா மொழிகளில் ரசிக பட்டாளம் இருக்கிறாா்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வளைகுடா நாடுகளில் நடைபெற்று வருகிறது. சாஹூ படம் தொடங்கப்பட்ட முதலே பிரபாசுக்கு ஜோடியாக நடிக்க போகும் நடிகைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் உலவி வந்தன. தற்போது இது முற்றுப்புள்ளியாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம்.