பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர் சாய் பல்லவி. தற்போது தமிழில் சூர்யா 36, மாறி-2, கரு என பல படங்களில் நடித்துள்ளார். கரு படத்தின் இசை வெளியிட்டு சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய சாய்பல்லவி தமிழில் நடிக்க காலதாமதம் செய்தது ஏன் என்பது பற்றி கூறியிருந்தார். கரு படமானது பெண்ணை மையப்படுத்திய கதை என்பதால் இந்த படத்தின் மூலம் தமிழில் நல்ல பெயர் கிடைக்கும் என்ற எதிா்பார்ப்போடு இருக்கிறார் சாய்பல்லவி.

கரு மாதிரி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்ததாக கூறினார். இந்நிலையில் கரு படமானது தெலுங்கில் கணம் என்ற பெயரில் வெளியாக உள்ளது. கரு படத்தை இயக்குநா் ஏ.எல். விஜய் இயக்கி உள்ளார். கரு படமானது தெலுங்கில் கணம் என்ற பெயரில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா நேற்று நடந்துள்ளது. சாய்பல்லவி இந்த விழாவில் பங்கேற்பதற்காக சென்றார். அப்போது அவரின் கார் ட்ராபிக்கில் மாட்டியது. ட்ராபிக் சரியாக நீண்ட நேரம் ஆகும் என்ற காரணத்தால் காரிலிருந்து இறங்கி, தன் உதவியாளருடன் பைக்கில் விழாவுக்கு சென்றுள்ளார். அவா் பைக்கில் அவரது உதவியாளருடன் சென்ற புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்தது அவரது ரசிகபெருமக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனா்.