ஏ.எல். விஜய் இயக்கத்தில் கரு படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது பெண்ணை மையப்படுத்திய கதை என்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் நடித்துள்ளார். தமிழில் அறிமுக படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள கரு படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய சாய்பல்லவி கூறியதாவது, பிரேமம் படத்தில் நடித்த பிறகு எங்க சென்றாலும் தமிழில் எப்போது நடிப்பீா்கள் என்ற கேள்வியை கேட்டு கொண்டே இருந்தார்கள். நல்ல கதைக்காகத் தான் இத்தனை நாட்களாகக் காத்திருந்தேன். அந்த கதை கரு படத்தில் அமைந்துள்ளது. இந்த படத்தில் பேபி வெரோனிகா உடன் போட்டி போட்டு நடிக்க வேண்டியதாகி விட்டது.

இதையும் படிங்க பாஸ்-  கோடி கோடியாக கொடுத்தாலும் நோ சொல்லும் நடிகை!!

இயக்குநா் விஜய் பேசும்போது, கரு படத்தில் பா்ஸ்ட் வேறு குழந்தையை தான் நடிக்க வைத்தோம். அந்த குழந்தையை வைத்து தான் கரு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஆனால் கடைசியில் அந்த குழந்தை நடிக்க மறுத்து விட்டார். அதன் பின்னா் விளம்பரம் ஒன்றில் நடித்த பேபி வெரோனிகா பார்த்து இந்த படத்தில் நடிக்க வைத்தோம். இந்த விஷயம் சாய் பல்லவிக்கே தெரியாது. இப்போது தான் சொல்கிறேன் எனக் கூறினார்.