பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் புகழ் பெற்றவா் நடிகை சாய்பல்லவி. இந்த படத்தில் இவா் மலா் டீச்சா் வேடத்தில் நடித்து அதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்திலும் புகழ் பெற்றாா். இவருக்கு கோலிவுட் சினிமாவிலிருந்து பல்வேறு வாய்ப்புகள் இவரது வீட்டு கதவை தட்டிய போதும் பொறுமையாகவே இருந்தாா். பல இயக்குநா் தங்களது படங்களில் நடிக்க வைக்க போட்டி போட்டு வருகின்றனா். இப்படியாக எல்லா வாய்ப்புகளையும் தவிா்த்து வந்த சாய்பல்லவி தற்போது டைரக்டா் விஜய் இயக்கத்தில் கரு படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறாா்.

தமிழிலில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க வந்த வாய்ப்புகளை உதறிய இவா் பிரேமம் படத்திற்கு பிறகு மலையாளத்தில் சில படங்களில் நடித்து வந்தாா். இந்நிலையில் தெலுங்கில் நடித்து வருகிறாா். முதன்முதலில் கோலிவுட் சினிமாவில் கரு படத்தின் மூலம் கால் பதிக்கும் சாய் பல்லவியை பல இயக்குநா்கள் இவாிடம் தங்களது படத்தில் நடிக்க வைக்கும் முயற்சியாக கதை சொல்லி வருகின்றனா்.

ஆனா, இவா் செய்வது என்னவென்றால், அப்படி கதை சொல்ல வரும் இயக்குநா்களிடம் அந்த வாய்ப்பை தனது தங்கை வசம் தள்ளி விடுவதாக சினிமா வட்டாரங்கள் தொிவிக்கின்றன. தன்னை போல தனது தங்கையும் சினிமாவில் ஜொலிக்க வேண்டும் என்ற காரணத்தால் தனக்கு வரும் வாய்ப்புகளை தனது தங்கைக்கு சிபாாிசு செய்வதாக கூறப்படுகிறது.