Actres Sai pallavi – என்.ஜி.கே படத்தில் நடித்த போது ஏற்பட்ட அனுபவம் பற்றி நடிகை சாய்பல்லவி சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

என்.ஜி.கே படப்பிடிப்பு ஒரு கோவில் போல இருந்தது. மற்ற பட படப்பிடிப்புகளில் செல்போன் பயன்படுத்துவோம், மற்ற படங்களை பற்றி பேசுவோம் ஆனால் செல்வராகவன் படப்பிப்பில் அடுத்து நடிக்க வேண்டிய காட்சிக்கு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒரு வசனத்தை எப்படி பேச வேண்டும் என அழகாக சொல்லிக் கொடுப்பார். அது வரும் வரை நம்மை விடமாட்டார்.

இதையும் படிங்க பாஸ்-  படப்பிடிப்பில் நயன்தாராவை திட்டிய சக நடிகை...

ஒரு நாள் காலை முதல் மாலை வரை அவர் எதிர்பார்த்த ரியாக்‌ஷன் என் முகத்தில் வரவில்லை. அடுத்த நாள் பார்த்துக் கொள்ளலாம் எனக்கூறிவிட்டார். அன்று இரவு முழுக்க அழுதேன். என் அம்மாவிடம் நடிப்பை விட்டு விடுவதாக கூறினேன். அடுத்த நாள் ஒரே டேக்கில் ஓகே செய்துவிட்டார். என் அம்மா உங்களிடம் பேசினார்களா எனக்கேட்டேன். இல்லை. நான் கேட்டது வந்து விட்டது எனக்கூறினார்” என சாய்பல்லவி தெரிவித்துள்ளார்.