‘பிரேமம்’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை சாய் பல்லவி தற்போது தமிழில் சூர்யா உள்பட முன்னணி நடிகர்களுடன் பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் இவருக்கும் தெலுங்கு நடிகர் கண்டா ரவிதேஜாவுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக ஏற்கனவே கிசுகிசு கிளம்பியது.

கண்டா ரவிதேஜா திருமணமானவர் என்பதும் ‘ஜெயதேவ்’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் ஆந்திர மாநில கல்வி அமைச்சர் கண்டா ஸ்ரீனிவாஸ் மகன் ஆவார்.

இந்த காதல் கிசுகிசுவிர்கு அமைச்சர் கண்டா ஸ்ரீனிவாஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “எனது மகனும் சாய் பல்லவியும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்காத நிலையில் இது போன்ற வதந்திகளை பரப்புவது வருத்தமாக இருக்கிறது என்று கூறினார்.