பிரேமம் படத்தில் அறிமுகமாகி இன்று கேரளா மட்டுமின்றி தமிழ் மற்றும் தெலுங்கு புகழ் பெற்றிருக்கும் நடிகை சாய்பல்லவி என்பது தெரிந்ததே. நடிக்க வருவதற்கு முன்னர் ஜார்ஜியாவில் டாக்டருக்கு படித்த சாய்பல்லவி, திடீரென ‘பிரேமம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் டாக்டர் படிப்பை விட்டுவிட்டார்.

பிரேமம் ஹிட்டானதால் முழுநேர நடிகையாம மாறிவிட்டதாக்வும் ஒரே நேரத்தில் இரண்டு படகுகளில் சவாரி செய்ய கூடாது. அதுவும் மருத்துவ தொழில் உயிர்கள் சம்பந்தப்பட்டது என்பதால் நடித்துக்கொண்டு டாக்டர் வேலை பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும் சாய்பல்லவி கூறியுள்ளார்.

தனக்கு பிடித்த நடிகர் சூர்யா என்றும், அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை என்னால் நம்பவே முடியவில்லை என்றும் கூறிய சாய்பல்லவி, தற்போது சாய்பல்லவி, தனுஷின் ‘மாரி 2, மிஷ்கின் இயக்கும் அடுத்த படம் மற்றும் ஒரு தெலுங்கு படம் என பிசியாக உள்ளார்.