சந்தானம் ஹீரோவாக நடித்த சக்க போடு போடு ராஜா’ திரைப்படம் மற்ற சந்தானம் படம் போலவே காமெடியாக இருக்கும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதேபோல் காமெடியுடன் கூடிய காதல் கதையை தந்துள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை பார்ப்போம்

சந்தானம் காதலிக்கும் வைபவி, ஒரு பெரிய ரெளடியின் தங்கை. ஏற்கனவே ஒரு தங்கையை காதலா இழந்த அண்ணன் சம்பத், வைபவியையாவது தான் நினைத்த மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதனால் தங்கையை காதலிக்கும் சந்தானத்தை போட்டுத்தள்ள முடிவு செய்து அவரை தேடி வருகிறார். ஆனால் சம்பத்தின் மனதை மாற்றி சந்தானம் எப்படி காதலியை கைப்பிடிக்கின்றார் என்பதுதான் கதை

ஏற்கனவே பல தமிழ் படங்களில் வந்த இந்த கதையை எதற்காக தெலுங்கு ரைட்ஸ் வாங்கி எடுத்திருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. முதல் பாதியில் ஒரு காட்சி கூட தேறவில்லை. இரண்டாம் பாதியில் விவேக்கின் நகைச்சுவையும் சிலபல திருப்பங்களும் படத்திற்கு பலமாக உள்ளது.

சந்தானம், வழக்கம்போல் பாட்டு, சண்டை, காதல், காமெடி என கலக்குகிறார். ஆனால் எதிலும் புதுமை இல்லை. இப்படியே தொடர்ந்து சில படங்கள் நடித்தால் கஷ்டம் தான்

வைபவி அழகாக இருக்கின்றார், சுமாராக நடிக்கின்றார். நல்ல கதையை தேர்வு செய்தால் கோலிவுட்டில் ஒரு ரவுண்ட் வரலாம்

விவேக் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம்,. இரண்டாம் பாதியில் படத்தை தூக்கி நிறுத்துவது அவருடைய கேரக்டர்தான்

மற்றும் விடிவி கணேஷ், சம்பத், ரோபோ சங்கர் ஆகியோர் காமெடிக்கு உதவி செய்துள்ளனர்

சிம்புவின் இசையில் மகாமட்டமான பாடல்கள். பின்னணி இசையும் தேறவில்லை. சிம்பு இனிமேல் இசையை விட்டுவிடுவது ரசிகர்களுக்கு நல்லது.

மொத்தத்தில் அரைத்த மாவையே அரைத்த சுமாரான ராஜா

2/5