கமல் பட இயக்குனருக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பல படங்கள் இயக்கிய கே.பாலசந்தர் அவர்களுக்கு ஏற்கனவே தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ள நிலையில் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமான இன்னொரு இயக்குனரான கே.விஸ்வநாத் அவர்களுக்கு 2016ஆம் ஆண்டின் தாதா சாகேப் பால்கே விருது சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடித்த ‘சிப்பிக்குள் முத்து’, சலங்கை ஒலி, மற்றும் சங்கராபரணம், உள்பட பல திரைப்படங்களை கே.விஸ்வநாத் இயக்கியுள்ளார். அதுமட்டுமின்றி ‘குருதிப்புனல்’, காக்கை சிறகினிலே, யாரடி நீ மோகினி’, ‘ராஜபாட்டை’, ‘உத்தமவில்லன்’ போன்ற படங்களில் குணசித்திர வேடங்களிலும் அவர் நடித்துள்ளார்.

கே.விஸ்வநாத் அவர்களுக்கு இந்த விருது வரும் மே மாதம் 3ஆம் தேதி டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களால் வழங்கப்படவுள்ளது. இந்திய திரையுலக மேதைகளில் ஒருவரான கே.விஸ்வநாத் அவர்களுக்கு சினிரிப்போர்ட்டர்ஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.