salem ajithfans

முன்னணி நடிகர்களுக்கென்று ரசிகா் மன்றங்களை அவரது ரசிகபெருமக்கள் அமைப்பது வழக்கம். ஆனால் தல அஜித் தனக்கு ரசிகர் மன்றம் எதுவும் வேண்டாம் என்று கூறி தனக்கு அமைத்த ரசிகா் மன்றத்தையே கலைத்தவர். ஏனெனில் ரசிகா் மன்றம் அமைத்து கொண்டால் ரசிகா்களின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட கூடும் என்ற காரணத்தால் அஜித் ரசிகா் மன்றம் வேண்டாம் என்று கூறியதால் மேலும் அவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே உள்ள மணக்காட பகுதியை சேர்ந்தவர் விஜய். இவரை நான்கு பேர் சேர்ந்த கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். சேலம் மாவட்ட அஜித் ரசிகர் மன்ற தலைவராக உள்ளார். இவர் தற்காலிகமாக ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது கொலை முயற்சி, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் இருப்பதால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

குண்டர் கைதாகி, பின் சிறையிலிருந்து வெளிவந்த விஜய் அண்மையில் தான் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.விஜய் மர்ம நபர்களால் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எதற்காக கொலை செய்ய்பட்டார் என்ற காரணம் இன்னும் தெரியவில்லை. போலீசார் கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.